Home நாடு மஇகா திறந்த இல்ல தீபாவளி உபசரிப்பில் 5,000 பேர்களுடன் பிரதமர் நஜிப்!

மஇகா திறந்த இல்ல தீபாவளி உபசரிப்பில் 5,000 பேர்களுடன் பிரதமர் நஜிப்!

646
0
SHARE
Ad

Najib attending Deepavali open house 418 x 215கோலாலம்பூர், அக்டோபர் 22 – இன்று நாடெங்கிலும் இந்துப் பெருமக்கள் தீபாவளிப் பெருநாளை  கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தீபாவளியை முன்னிட்டு தலைநகர் புத்ரா வாணிப மையத்தில் மஇகா நடத்திய திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் நஜிப் தம்பதியர் உட்பட திரளான அமைச்சர்களும், அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பல்வேறு இனங்களையும், மதங்களையும் கொண்ட ஏறத்தாழ 5,000 பேர் இன்றைய மஇகா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர் என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்தது.

#TamilSchoolmychoice

பல்வேறு வெளிநாடுகளின் தூதர்களும் இந்த உபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர்.

இன்று காலை 10.15 மணியளவில் மஇகாவின் திறந்த இல்ல விருந்துபசரிப்புக்கு வருகை தந்த நஜிப் தம்பதியருக்கு மேள, தாள முழக்கத்தோடு வரவேற்பு நல்கப்பட்டது.

மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்கள் நஜிப் தம்பதியரை வரவேற்றனர்.

துணைப் பிரதமர் மொய்தீன் யாசின், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், உள்துறை அமைச்சர் அமகமட் சாஹிட் ஹமிடி, இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், அமைச்சர்கள் நான்சி சுக்ரி ஆகியோரும் ம.இ.காவின் தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்டனர்.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவும் அவரது துணைவியார் இந்திராணியும் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்திய பாரம்பரிய உடையான குர்தா-பைஜாமாவில் வருகை தந்த நஜிப், பின்னர் மஇகா பிரமுகர்களோடு தீபாவளி கேக் ஒன்றை வெட்டினார்.

சுமார் 1 மணி நேரம் விருந்துபசரிப்பில் கலந்து கொண்டு வந்திருந்தவர்களோடு நஜிப் அளவளாவினார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நஜிப் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளி ஒரு மகிழ்ச்சியான, கொண்டாட்டமான சூழ்நிலையை இந்த ஆண்டும் ஏற்படுத்தியிருக்கிறது என்றும், மலேசியர்களுக்கிடையில் நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் வளர்க்க உதவுகின்றது என்றும் தெரிவித்தார்.