Home வாழ் நலம் பொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி

பொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி

924
0
SHARE
Ad

podukuகோலாலம்பூர், பிப்.26- பலரையும் அவதிப்படுத்துவது பொடுகுத் தொல்லை.

இதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி? இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து, அரைமணி நேரம் வைக்கவும்.

பின் சீயக்காய் தேய்த்துக் கழுவி விடவும். கடைசியாக தண்ணீர் விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்துக்கு இரண்டு முறை பச்சைப் பயிறு மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளிக்கவும். இவ்வாறு செய்தால் பொடுகு மறைந்துவிடும்.

#TamilSchoolmychoice

மேலும் மறுபடி வராமல் இருக்க, ஊமத்தை இலையால் காய்ச்சப்பட்ட துர்தூரபத்ராதி தைலத்தைப் பயன்படுத்தவும். கேரள மாநிலத்தில் சில பெண்கள் தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் முடி நன்றாக வளர்கிறது.

எலுமிச்சம்பழத்தை உலரவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். ஆலமரத்தின் விழுதையும் அதைப் போல பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடிகளை தேங்காய் எண்ணையில் சம அளவாகக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்கு உபயோகிக்கலாம்.

அருகம்புல், கடுக்காய், கரிசலாங்கண்ணி, மருதாணி, அதிமதுரம், கறிவேப்பிலை போன்றவற்றைத் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சினால் அது முடி வளர வைக்கும் நல்ல தைலம் ஆகும். வேப்பிலைப் பொடியையும் தலைக்குத் தேய்த்துக்குளிக்கலாம்.