Home கலை உலகம் சரத்குமார், ராதாரவிக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

சரத்குமார், ராதாரவிக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

660
0
SHARE
Ad

Radha-Raviசென்னை, நவம்பர் 21 – நடிகர் சங்க பிரச்சனையில், தலைவர் சரத்குமார், செயலர் ராதாரவி, துணைத் தலைவர் காளைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. ‘நடிகர் சங்கம் குறித்து, விஷால் அவதுாறாக பேசினால், சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்’ என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் எச்சரித்திருந்தார்.

‘நடிகர் சங்கம் குறித்து தவறாக பேசியதாக நிரூபித்தால், நான் சங்கத்தை விட்டே சென்று விடுகிறேன்’ என விஷால் பதிலடி கொடுத்தார். இதனால் நடிகர் சங்கத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் சங்க புதிய கட்டட கட்டுமான ஒப்பந்தத்தால், பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என, நிர்வாகிகளை உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சங்கம் தொடர்பாக நடிகர்களிடையே பிரச்சனை ஏற்படாமல் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

நடிகர் சங்க கட்டட நிதிக்காக, நடிகர் விஷால் உட்பட, இளம் முன்னணி நடிகர்களை வைத்து, புதிய படம் தயாரித்து கிடைக்கும் வருவாயில் புதிய கட்டடத்தை கட்டவும், சத்யம் சினிமா நிறுவனத்துடன் புதிய கட்டடம் கட்டுவதற்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வும் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

சரத்குமார் கூறும் போது, ‘பூச்சி’ முருகன் என்பவர், பதவி தரவில்லை என்பதால், நடிகர் சங்க நிர்வாகிகள் மீது, குறை கூறி வருகிறார் என, குறை கூறியிருந்தார்.

இதுகுறித்து, ‘பூச்சி’முருகன் கூறியதாவது: “சரத்குமார், திருச்சியில் என்னை பற்றி சொன்னது பொய். நான் பதவி கேட்கவில்லை”.  நடிகர் சங்கத்திற்கு, இழப்பை ஏற்படுத்தும் புதிய கட்டட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன்.

“இது, சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் பிடிக்கவில்லை. என்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினர்.  நான், நீதிமன்றம் சென்றதால், என்னை அவர்களால் நீக்க முடியவில்லை; உறுப்பினராக தொடர்கிறேன்”.

“சரத்குமாரும், ராதாரவியும் மாமன் மச்சான் என்பதாலும் மற்ற நிர்வாகிகளில் சிலர்  இவர்களுக்கு ஆதரவாக இருப்பதாலும் புதிய கட்டட விவகாரத்தில் இவர்கள் சுய ஆதாயம் தேட முயல்கின்றனர்”.

“இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை, சங்கத்தில் இருந்து நீக்குகின்றனர். புதிய கட்டடம் கட்ட, நிதி திரட்ட இளம் நடிகர்கள் படம் தயாரித்தால, அவர்களுக்கு நானும் உதவியாக இருப்பேன்.”

“சங்க நலனுக்கு எதிராகவும், உறுப்பினர்களை இழிவாக பேசினாலும், அவர்களை சங்கத்தை விட்டு நீக்க, சங்க விதிகளில் வழி உள்ளது. திருச்சியில் நடந்த கூட்டத்தில் நடிகர் சங்க துணைத் தலைவர்காளை, நடிகர்களை, ‘நாய்கள்’ என பேசியுள்ளார்.”

“இதற்கான ஆதாரம் இருக்கிறது. இவரையும், சங்கத்திற்கு புறம்பாக நடக்கும் சரத்குமாரையும், ராதாரவியையும் தான், சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என , ‘பூச்சி’ முருகன் கூறினார்.