Home நாடு “மாஸ் தோல்விக்குக் காரணம் தேமு- மலேசியர்கள் அல்ல” – குவான் எங் பதிலடி

“மாஸ் தோல்விக்குக் காரணம் தேமு- மலேசியர்கள் அல்ல” – குவான் எங் பதிலடி

503
0
SHARE
Ad
Lim Guan Eng
லிம் குவான் எங்

கோலாலம்பூர், டிசம்பர் 8 – தனியார் நிறுவனமான ஏர்ஏசியாவின் வெற்றி, மலேசியர்கள் விமானப் போக்குவரத்து சேவையை திறம்பட நிர்வகிக்கிறார்கள் என்பதற்கான சான்று என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர் ஒருவரின் தலைமையில் தான் மாஸ் நிறுவனத்தின் நிர்வாகம் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளது. காரணம் மலேசியர்கள் விமான சேவையை நிர்வகிப்பதில் முட்டாள் தனமாக செயல்படுகின்றனர் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் கூறியிருக்கும் கருத்துக்கு லிம் குவான் எங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தோல்விக்குக் காரணம் தேசிய முன்னணி தானே தவிர, மலேசியர்கள் கிடையாது என்றும் லிம் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அரசாங்கத்தின் ஒரு காசு நிதி உதவியும் இன்றி, திறமையான நிர்வாகம் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம் ஏர்ஏசியா வெற்றியடைந்துள்ளது என்று லிம் தெரிவித்துள்ளார்.

மாஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை நிர்வகிக்க ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோப் ஆர் முல்லரை என்பவரை நியமனம் செய்யப் போவதாக கசானா நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

அது குறித்து ‘தி மலாய் மெயில்’ பத்திரிக்கைக்கு மகாதீர் அளித்த பேட்டியில், மலேசியர்கள் முட்டாள்தனமாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு விமான சேவையை நிர்வகிப்பது எப்படி என்று தெரியவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.