Home உலகம் சிட்னியில் தீவிரவாதிகளால் 13 பேர் சிறைப்பிடிப்பு – மோடி, ராஜபக்சே கவலை!

சிட்னியில் தீவிரவாதிகளால் 13 பேர் சிறைப்பிடிப்பு – மோடி, ராஜபக்சே கவலை!

742
0
SHARE
Ad

forensic-experts-collectபுதுடெல்லி, டிசம்பர் 15 – ஆஸ்திரேலிய சிட்னி நகரின் மத்தியில் செயல்பட்டு வரும் கஃபே ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த 13 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயல் தனக்கு கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல் என்றும், மிகவும் துரதிருஷ்டவசமானது எனவும் மோடி கூறியுள்ளார். பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள பொதுமக்கள் அனைவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் மோடி மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கவலை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவுன் னவ்ர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்,

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????“சிட்னி பிணைக்கைதி நிலவரம் பற்றி ஆழ்த்த கவலை அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அபாட் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிப்போம்”.

“தீவிரவாதிகளின் நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்றாலும் ஆஸ்திரேலியர்கள் பயமின்றி தங்களின் பணியை தொடருங்கள்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.