சென்னை, டிசம்பர் 24 – தமிழ் சினிமா இயக்குனர் கே.பாலசந்தர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலச்சந்தரின் உடல் தற்போது மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி, சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் அவரது உடலை பார்த்து அஞ்சலி செலுத்தினர்.
#TamilSchoolmychoice
ரஜினிகாந்த் தனது குருவின் மறைவை எண்ணி கண்ணீர் சிந்தினார். உலகநாயகன் கமல்ஹாசன் பாபநாசம் படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றதால் தற்போது அங்கிருந்து உடனடியாக வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.
இதனால் நாளை சென்னையை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலச்சந்தரின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் சினிமா நட்சத்திரங்கள் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.