Home கலை உலகம் கே.பாலசந்தர் மரணம்: கதறும் ரஜினிகாந்த், அமெரிக்காவில் சிக்கிய கமல்!

கே.பாலசந்தர் மரணம்: கதறும் ரஜினிகாந்த், அமெரிக்காவில் சிக்கிய கமல்!

650
0
SHARE
Ad

k_balachander_death094சென்னை, டிசம்பர் 24 – தமிழ் சினிமா இயக்குனர் கே.பாலசந்தர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலச்சந்தரின் உடல் தற்போது மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி, சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் அவரது உடலை பார்த்து அஞ்சலி செலுத்தினர்.

k_balachander_death

#TamilSchoolmychoice

ரஜினிகாந்த் தனது குருவின் மறைவை எண்ணி கண்ணீர் சிந்தினார். உலகநாயகன் கமல்ஹாசன் பாபநாசம் படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றதால் தற்போது அங்கிருந்து உடனடியாக வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.

k_balachander_death065இதனால் நாளை சென்னையை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலச்சந்தரின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் சினிமா நட்சத்திரங்கள் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.