சென்னை, ஜனவரி 3 – புத்தாண்டையொட்டி சென்னையில், 100 சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு அன்று சிறந்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் என 100 பேரை தேர்ந்தெடுத்து வி4 நிறுவனம் விருது வழங்கி வருகிறது.
கடந்த 2014 ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவில், தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோர் நடித்த படங்களை இயக்கிய 102 வயதான மூத்த இயக்நனர் மித்ரதாசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அவருடன் ஒளிபதிவாளர் என்.கே.விஸ்வநாதன், மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம், கலை இயக்குனர் தோட்டாதரணி,
வசனகர்த்தா ‘வியட்நாம் வீடு’ சுந்தரம், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், துணை நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இயக்குநர் கே.பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர். விருதும், ஆர்.பாண்டியராஜனுக்கு சிவாஜிகணேசன் விருதும் வழங்கப்பட்டது. சிபிராஜ் (நாய்கள் ஜாக்கிரதை), ஆரி (நெடுஞ்சாலை), விமல் (மஞ்சப்பை), பாலாஜி (நாய்கள் ஜாக்கிரதை),
யோகி தேவராஜ் (கயல்), பிளாரன்ட் பெரைரா (கயல்), அபினய் (ராமானுஜன்), சதீஷ் (மான்கராத்தே), நடிகைகள் தன்ஷிகா (பரதேசி), சஞ்சனாசிங் (அஞ்சான்) ஆகியோர் சிறந்த நடிகர்-நடிகைகளுக்கான விருது பெற்றார்கள்.
சிறந்த நகைச்சுவை நடிகர்களுக்கான விருதுகளை விவேக், சூரி இருவரும் பெற்றுக்கொண்டார்கள். சிறந்த இசையமைப்பாளர்களுக்கான விருது டி.இமான், அனிருத் ஆகிய இருவருக்கும், சிறந்த பட அதிபருக்கான விருது மனோபாலாவுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த இயக்குநர்களுக்கான விருதுகளை பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), எழில் (வெள்ளக் கார துரை), பிரபு சாலமன் (கயல்), ஞானராஜசேகரன் (ராமானுஜன்), விஜய் மில்டன் (கோலி சோடா), சுசீந்திரன் (ஜீவா), வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி), கவுரவ் (சிகரம் தொடு),
ஆனந்த் சங்கர் (அரிமாநம்பி), வினோத் (சதுரங்க வேட்டை), ராஜபாண்டி (என்னமோ நடக்குது), முத்துராமலிங்கன் (சினேகாவின் காதலர்கள்), டீகே (யாமிருக்க பயமேன்),
கார்த்திக் கிரிஷ் (கப்பல்), மகிழ்திருமேனி (மீகாமன்), பிரவீன்காந்த் (புலிப்பார்வை), கிருஷ்ணா (நெடுஞ்சாலை), இளையதேவன் (ஞானகிருக்கன்) ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.
சிறந்த கதாசிரியருக்கான விருது ‘லிங்கா’ படத்துக்காக பொன்குமரனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், சிறந்த வசனகர்த்தா பாலாஜி மோகன், சிறந்த ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ் உள்பட மொத்தம் 100 சினிமா கலைஞர்கள் விருது பெற்றார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சத்யராஜ், பிரபு, நெப்போலியன், வாகை சந்திரசேகர், நடிகைகள் குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மணிரத்னம்,
சரண்யா பொன்வண்ணன், குட்டி பத்மினி, நளினி, டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகரன், பட அதிபர்கள் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன்,
தனஞ்செயன், கே.ராஜன், கே.எஸ்.சீனிவாசன், சித்ராலட்சுமணன், பட்டியல் சேகர், அமுதா துரைராஜ், ருக்மாங்கதன், ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா, கவிஞர் பிறைசூடன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.