Home தொழில் நுட்பம் சியாவுமி மூலமாக சீனாவிற்குள் நுழையும் பேஸ்புக்!

சியாவுமி மூலமாக சீனாவிற்குள் நுழையும் பேஸ்புக்!

570
0
SHARE
Ad

XiaomiLogo650பெய்ஜிங், ஜனவரி 13 –  பேஸ்புக், டுவிட்டர், யூ-டியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை சீன அரசு எப்போதும் தங்கள் நாட்டிற்குள் அனுமதித்தில்லை. இந்நிலையில், பேஸ்புக் பயன்பாட்டிற்கு எப்படியும் அனுமதி பெற்றுவிட மார்க் சக்கர்பெர்க் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சீனாவின் வட்டார மொழியான மாண்டரினைக் கற்று அந்நாட்டு அமைச்சர்களுடனும், பிரதிநிதிகளுடனும் தொடர் அளவளாவலை மேற்கொள்ளும் மார்க், சீன உறவிற்கு அச்சாரமாக சியாவுமியில் பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆசியாவின் முக்கிய நாடுகளான சீனா மற்றும் இந்தியாவை முற்றுகையிட முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம்.

#TamilSchoolmychoice

இந்தியாவில் தனது இடத்தை வலுவாக தக்க வைத்துக் கொண்ட பேஸ்புக், சீனாவிலும் கோலோச்ச பலமாக முயற்சித்து வருகின்றது. அதன் முதல் படியாகதான் சீனாவின் முன்னணி செல்பேசி நிறுவனமான சியாவுமியுடன், வர்த்தக முதலீடுகளை மேற்கொள்ள உடன்பட்டுள்ளது.

சீனாவில் பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ள சியாவுமிக்கு தனது கிளைகளை உலகெங்கிலும் எடுத்துச் செல்ல தற்போது பெரு நிறுவனங்களின் நிதி தேவைப்படுகிறது.

இதற்காக பல்வேறு நிறுவனங்களை அணுகிய நிலையில், பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கும், சியாவுமி தலைவர் லீ ஜூன்னும் கலந்து கொண்டனர்.

அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பேஸ்புக், சியாவுமியில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது. எனினும், இது தொடர்பாக இரு நிறுவனங்களும் பதில் அளிக்க மறுத்துவிட்டன.

பேஸ்புக் நிறுவனம் மீது சீனா, பல தருணங்களில் மென் போக்கையே கடைபிடித்துள்ளது. மேலும், தங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டால், பேஸ்புக்கை அனுமதிப்பதில் தயக்கமில்லை என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், சியாவுமிக்கு ஆதரவளிப்பதால், சீன அரசின் ஆதரவினைப் பேராலம் என பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. சியாவுமி, வர்த்தக ரீதியாக பெரும் வளர்ச்சியைப் பெற்று இருந்தாலும், ஆசிய சந்தைகளில் மட்டுமே பிரபலமடைந்துள்ளது.

பேஸ்புக்கின் முதலீடு மூலம் உலக நிறுவனங்கள் அளவிற்கு அங்கீகாரம் பெறலாம் என்று திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.