Home இந்தியா ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: யாருக்கும் ஆதரவும் கிடையாது பாமக ராமதாஸ்!

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: யாருக்கும் ஆதரவும் கிடையாது பாமக ராமதாஸ்!

675
0
SHARE
Ad

ramadoosசென்னை, ஜனவரி 21 – ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார். மேலும் இடைத் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பாமக தலைமை நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது;-

“சொத்துக் குவித்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு திருவரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார்”.

#TamilSchoolmychoice

“இதையடுத்து காலியாகியுள்ள திருவரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 13-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது”.

“இந்தத் தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நேற்று (20.01.2015) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது”.

“பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்றார். அந்தக் கூட்டத்தில் திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது”.