Home இந்தியா அதிமுகவை வெற்றி பெற வைத்த ஸ்ரீரங்கம் மக்களுக்கு இதயம் கனிந்த நன்றி – ஜெயலலிதா!

அதிமுகவை வெற்றி பெற வைத்த ஸ்ரீரங்கம் மக்களுக்கு இதயம் கனிந்த நன்றி – ஜெயலலிதா!

644
0
SHARE
Ad

jayalalithaaசென்னை, பிப்ரவரி 17 – ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவை அமோக வெற்றி பெற வைத்த அத்தொகுதி மக்களுக்கு அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் வளர்மதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட 28 வேட்பாளர்களையும் தோற்கடித்து 1,51,5,16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

valarmathy-jaya3இதுகுறித்து ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “அ.தி.மு.க மக்களின் கட்சி, மக்கள் தங்களுடைய வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நம்புகின்ற ஒரே கட்சி. மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றது”.

#TamilSchoolmychoice

“அதனைப் புரிந்து கொண்ட மக்களும் இவ்வெற்றியினை எமது கட்சியின் வேட்பாளருக்கு அளித்துள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைத்த வாக்காளர்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார் ஜெயலலிதா.