Home தொழில் நுட்பம் ஆப்பிள் தானியங்கிக் கார்களை தயாரிக்கிறதா?

ஆப்பிள் தானியங்கிக் கார்களை தயாரிக்கிறதா?

485
0
SHARE
Ad

apple carநியூயார்க், பிப்ரவரி 17 – செல்பேசிகள் தளத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த ஆப்பிள், அடுத்ததாக தானியங்கி மின்சாரக் கார்கள் தயாரிப்பில் இறங்கப்போவதாக தொழில்நுட்ப வல்லுனர்களால் ஆருடங்கள் கூறப்படுகின்றன.

தானியங்கிக் கார்கள் என்றவுடன் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு, கூகுள் நினைவிற்கு வருவது இயற்கை. கூகுள் ஏற்கனவே இவ்வகையான கார்களின் தயாரிப்பில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை, ஆப்பிளின் இந்த புதிய திட்டம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதில் கலிபோர்னியா மாகாணத்தின் குப்பர்டினோவில் இருக்கும் ஆப்பிளின் தலைமை அலுவலகத்திற்கு சில மைல் தொலைவில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இந்த கார் தயாரிப்பில் இரகசியமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

icar2ஆப்பிள் இந்த திட்டத்திற்கு ‘டைடன்’ (Titan) என்று பெயர் சூட்டி உள்ளதாக கூறப்படுகின்றது. 2020-ம் ஆண்டிற்குள் தானியங்கி கார்களுக்கான வர்த்தகம் 25 பில்லியன் டாலர்களைத் தாண்டலாம் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கணித்துள்ள நிலையில்,

ஆப்பிள் கார்கள் தொடர்பான ஆருடங்கள் வெளியாகி உள்ளன. எனினும், இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தனது கருத்துக்களை கூற மறுத்துவிட்டார்.