ஸ்ரீரங்கம், பிப்ரவரி 16 – ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிகை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதில் அதிமுக வேடபாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் சீ.வளர்மதி,
திமுக வேட்பாளர் என்.ஆனந்த், பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க. அண்ணாதுரை உள்பட மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.
கடந்த 13-ஆம் தேதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் 81.83 சதவீதம் வாக்குகள் பதிவானது.
10 ஆம் சுற்று நிலவரம்:
அதிமுக: 66,203
திமுக: 21,480
பாஜக: 2,165
சிபிஎம்: 617
அதிமுக: 73, 564
திமுக: 24,749
பாஜக: 2.763
சிபிஎம்: 780
மதியம் ஒரு மணி அளவில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.