Home உலகம் 13 வயதில் அமெரிக்காவில் தொழில் அதிபர் ஆன இந்திய வம்சாவளி சிறுவன்!

13 வயதில் அமெரிக்காவில் தொழில் அதிபர் ஆன இந்திய வம்சாவளி சிறுவன்!

545
0
SHARE
Ad

1421832346-8002 (1)நியூயார்க், ஜனவரி 22 – அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் சுபம் பானர்ஜி. இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ஆம் வகுப்பு படிக்கிறான்.

இவனது பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில் வைப்பதற்காக கண் பார்வையற்றவர்கள் படிக்கும் ‘பிரெய்லி பிரிண்டர்’ என்ற கருவியை உருவாக்கினான்.

அதற்கு முன்னதாக, ஒரு நாள் தனது பெற்றோரிடம் கண் தெரியாதவர்கள் எப்படி படிப்பார்கள் என கேள்வி கேட்டான். அப்போது அவர்கள் ‘பிரெய்லி பிரிண்டர்ஸ்’ எனும் கருவி மூலம் படிப்பார்கள் என்றனர்.

#TamilSchoolmychoice

அது குறித்து இணையத்தளத்தில் பார்த்த போது அந்த கருவியின் விலை 2 ஆயிரம் அமெரிக்க டாலர் என தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவன், தானே புதிதாக மிக எளிமையான முறையில் ஒரு ‘பிரெய்லி பிரிண்டர்’ கருவியை தயாரித்தான்.

1421832368-7222அதை அவன் பல நாள் இரவு கண் விழித்து உருவாக்கினான். அதை தான் அறிவியல் கண்காட்சியில் வைத்து பாராட்டு பெற்றான். தற்போதுள்ள ‘பிரெய்லி பிரிண்டர்’ கருவி 9 கிலோவுக்கு மேல் எடை உள்ளது.

ஆனால் சுபம் பானர்ஜி தயாரித்துள்ள பிரிண்டர் கருவி மிக குறைந்த எடை கொண்டது. மேலும் விலையோ அமெரிக்க டாலர் மதிப்பில் 250 மட்டுமே.

இதற்கிடையே சிறுவன் சுபம் பானர்ஜி ரிங்கிட் 1.5 மில்லியன் முதலீட்டில் புதிதாக சிறிய தொழில் நிறுவனம் தொடங்கி தொழில் அதிபர் ஆகி இருக்கிறான். அவனுக்கு தந்தை உதவியாக இருக்கிறார்.

இது குறித்துக் கூறியுள்ள ஷுபம் பானர்ஜி, “அதிகப்படியான கண்பார்வையற்றவர்களை என்னுடைய பிரெய்லி பிரிண்டரை பயன்படுத்த வைப்பதே எனது இறுதிக் குறிக்கோளாகும்” என்றான்.