Home கலை உலகம் திரிஷா – வருண் மணியன் நிச்சயதார்த்தம் இன்று நடந்தது!

திரிஷா – வருண் மணியன் நிச்சயதார்த்தம் இன்று நடந்தது!

573
0
SHARE
Ad

trisha-with-varun-600சென்னை, ஜனவரி 23 – பிரபல நடிகை திரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

1999-ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிஷா, 2002-ல் ‘மவுனம் பேசியதே’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முன்னணி நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் என பெரிய கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்தி படமொன்றிலும் நடித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார் திரிஷா.

#TamilSchoolmychoice

இந்நிலையில் திரிஷாவுக்கு திடீரென திருமணம் முடிவாகியுள்ளது. தயாரிப்பாளர் வருண் மணியனை மணக்கிறார். இவர் தமிழில் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத் தலைவன்’ படங்களை தயாரித்துள்ளார்.

தொழில் அதிபராகவும் இருக்கிறார். திரிஷா-வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் நடந்தது.

trisha_varun_manian_engagement003இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திரிஷாவும், வருண்மணியனும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள்.

உறவினர்களுக்கு ருசியான விருந்தும் பரிமாறப்பட்டது. தனது திருமண நிச்சயதார்த்ததுக்காக சக நடிகர், நடிகைகளுக்கு திரிஷா நாளை விருந்து கொடுக்கிறார்.

கிண்டியில் உள்ள நட்சத்திர உணவு விடுதியில் இந்த விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடரப் போவதாக திரிஷா அறிவித்துள்ளார்.