Home தொழில் நுட்பம் விமானத்தில் இனி ரொக்கம் தேவையில்லை – அட்டை போதும் – ஏர் ஆசியா புதிய திட்டம்

விமானத்தில் இனி ரொக்கம் தேவையில்லை – அட்டை போதும் – ஏர் ஆசியா புதிய திட்டம்

439
0
SHARE
Ad

Big-points-AirAsia-600x360கோலாலம்பூர், ஜனவரி 28 – விமானத்தில் உணவு, பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வாங்க பயணிகளுக்கு புதிய வசதி ஒன்றை ஏர் ஆசியா அறிவிக்கவுள்ளது.

ரொக்க பணம் இன்றி முற்றிலும் முன்பண அட்டைகளின் மூலம் இந்த பரிவர்த்தனைகளை செய்யவுள்ளது.

பயணிகள் தங்கள் கைகளில் ரொக்க பணத்தை வைத்திருக்கத் தேவையில்லை. மாறாக ஏர் ஆசியா விமானப் பணியாளர்கள் பயணிகளுக்கு 3 வகையான முன்பண அட்டைகளை வழங்கவுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த அட்டைகளை வெளியிடும் திட்டத்திற்காக ஏர் ஆசியா, சந்தையில் டியூன் மணி நிறுவனத்துடன் 40% பங்குதாரராக இணைந்து 10 மில்லியன் ரிங்கிட்டுக்கு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

டியூன் மணி நிறுவனம் தற்போது இந்த அட்டைகளை வழங்கும் திட்டத்திற்கு நெகாரா வங்கியின் அனுமதிக்காக விண்ணப்பம் செய்துள்ளது.

இ இசட் பே விர்சுவல் ( EZPay Virtual), இ இசட் பே பாஸ்போர்ட் ( EZPay Passport), பிக் ப்ரீபெய்ட் விசா / மாஸ்டர் கார்டு (EZPay Passport) என அந்த மூன்று அட்டைகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளன.

எனினும், ஏர் ஆசியா கடந்த வருடம் வெளியிட்ட ஏசியன் பாஸ் திட்டத்திற்கும், டியூன் மணியின் திட்டத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.