Home நாடு மஇகா மாநில தலைவர் பதவிகளில் புதிய நியமனங்கள் – சோதி, சரவணன் நீக்கம்

மஇகா மாநில தலைவர் பதவிகளில் புதிய நியமனங்கள் – சோதி, சரவணன் நீக்கம்

466
0
SHARE
Ad

g-palanivel_mic-300x198கோலாலம்பூர், ஜனவரி 28 – பேராக் மாநில மஇகா தலைவர் பதவி உட்பட, மாநில தலைவர் பதவிகளுக்கான புதிய நியமனங்களை மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று அறிவித்தார்.

அதில்,தான் பதவி வகித்த பேராக் மாநில மஇகா தலைவர் பதவியை டான்ஸ்ரீ ராமசாமி முத்துசாமிக்கும், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் பதவி வகித்த நெகிரி செம்பிலான் தொகுதியை, டத்தோ கணேசன் ஆறுமுகத்திற்கும் அளித்து அவர்களை அத்தொகுதிகளின் தலைவர்களாக நியமித்துள்ளார்.

மேலும், டத்தோ எம்.சரவணன் தலைவராக இருந்த கூட்டரசுப் பிரதேச தொகுதியில் டத்தோ ராஜு வீரப்பெருமாளையும் நியமித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நியமனங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பழனிவேல் அறிவித்துள்ளார்.

தேசிய அளவில் கவனம் செலுத்துமாறு தான் கூறிய அறிவுரையை டத்தோ எஸ்.சோதிநாதன் ஏற்றுக் கொண்டதோடு, பெருந்தன்மையோடு தனது பதவியை விட்டுக் கொடுத்ததாகவும், மாநில அளவிலான தலைவர் பதவிகளுக்கு இன்னும் நிறைய மாற்றங்கள் உள்ளன அவற்றை அம்மாநிலத் தலைவர்களே அறிவிப்பார்கள் என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.