ரொக்க பணம் இன்றி முற்றிலும் முன்பண அட்டைகளின் மூலம் இந்த பரிவர்த்தனைகளை செய்யவுள்ளது.
பயணிகள் தங்கள் கைகளில் ரொக்க பணத்தை வைத்திருக்கத் தேவையில்லை. மாறாக ஏர் ஆசியா விமானப் பணியாளர்கள் பயணிகளுக்கு 3 வகையான முன்பண அட்டைகளை வழங்கவுள்ளனர்.
இந்த அட்டைகளை வெளியிடும் திட்டத்திற்காக ஏர் ஆசியா, சந்தையில் டியூன் மணி நிறுவனத்துடன் 40% பங்குதாரராக இணைந்து 10 மில்லியன் ரிங்கிட்டுக்கு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
டியூன் மணி நிறுவனம் தற்போது இந்த அட்டைகளை வழங்கும் திட்டத்திற்கு நெகாரா வங்கியின் அனுமதிக்காக விண்ணப்பம் செய்துள்ளது.
இ இசட் பே விர்சுவல் ( EZPay Virtual), இ இசட் பே பாஸ்போர்ட் ( EZPay Passport), பிக் ப்ரீபெய்ட் விசா / மாஸ்டர் கார்டு (EZPay Passport) என அந்த மூன்று அட்டைகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளன.
எனினும், ஏர் ஆசியா கடந்த வருடம் வெளியிட்ட ஏசியன் பாஸ் திட்டத்திற்கும், டியூன் மணியின் திட்டத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.