Home உலகம் எகிப்தில் போலீசாரை கொலை செய்த 183 பேருக்கு தூக்கு தண்டனை!

எகிப்தில் போலீசாரை கொலை செய்த 183 பேருக்கு தூக்கு தண்டனை!

627
0
SHARE
Ad

mbஎகிப்த், பிப்ரவரி 4 – எகிப்தில் அதிபராக இருந்த முகமது முர்சி கடந்த 2013–ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து அவரது சகோதரத்துவ கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. அது கலவரமாக மாறியது.

அப்போது கலவரக்காரர்கள் கெய்ரோ புறநகரான கெர்தசாவில் உள்ள போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதில் 13 போலீசார் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 188 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2 பேர் இறந்ததால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 13 போலீசாரை கொலை செய்த 183 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஒருவர் மைனர் என்பதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 183 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இவர்களின் தண்டனை விரைவில் நிறை வேற்றப்பட உள்ளது.