Home இந்தியா ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு!

ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு!

456
0
SHARE
Ad

srirangam-bypoll-admk-dmk-campaign-clashதிருச்சி, பிப்ரவரி 12 – ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழக சட்டசபையில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வளர்மதி, தி.மு.க. ஆனந்த், பாரதீய ஜனதா சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அண்ணாதுரை, ஐக்கிய ஜனதா தளம் ஹேமநாதன் மற்றும் 24 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது.

#TamilSchoolmychoice

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் மேயர்கள், வெளிமாவட்ட அ.தி.மு.க செயலாளர்கள் ஸ்ரீரங்கத்திலேயே முகாமிட்டு வாக்கு சேகரித்தனர். நடிகர், நடிகைகளும் பிரச்சாரம் செய்தனர்.

admk-srirangam-gh-600அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 4 நாள் திருச்சியில் முகாமிட்டு ஆதரவு திரட்டினார். முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தேர்தல் பிரச்சார பணிகளை முடுக்கிவிட்டார்.

தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், வெளி மாவட்ட செயலாளர்கள் உள்பட 64 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் தீவிரமாக பிரஅசாரம் செய்தனர். கனிமொழி கடந்த 7-ஆஅம் தேதி பிரசாரம் செய்தார்.

இதேபோல் பாரதீய ஜனதா வேட்பாளருக்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர்கள் இல.கணேசன், ஆகியோரும் பிரச்சாரம் செய்தார்கள்.

வேட்பாளர்கள் நேற்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கினார்கள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அனல் பறந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தேர்தல் பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினர் நேற்று மாலையே வெளியேறிவிட்டனர்.

stalinpirasaramஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 129 ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

வாக்குப்பதிவின் போது மோதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக விரிவான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.16-ந் தேதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அன்று மதியம் முடிவு தெரிந்துவிடும்.