Home நாடு மஇகா மறுதேர்தலை நடத்த 11 பேர் கொண்ட தேர்தல் குழு – சுப்ரா அறிவிப்பு

மஇகா மறுதேர்தலை நடத்த 11 பேர் கொண்ட தேர்தல் குழு – சுப்ரா அறிவிப்பு

486
0
SHARE
Ad

Datuk Seri Dr S.Subramaniam

கோலாலம்பூர், மார்ச் 3 – 2009 -ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்களைக் கொண்டு மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில், நேற்று மஇகா தலைமையகத்தில் இடைக்கால மத்திய செயலவைக் கூட்டம் நடைபெற்றது.

32 பேர் கொண்ட இந்த மத்திய செயலவையில் இருந்து 20 பேர் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

சங்கங்களின் பதிவிலாகா உத்தரவு படி, மஇகா மறுதேர்தலை நடத்த 7 முதல் 11 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் சுப்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், இந்த தேர்தல் குழுவில் இடம்பெற்றுவர்களின் பெயர்கள் அடுத்த மத்திய செயலவைக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், இத்தேர்தல் குழு அறிவிப்பிற்குப் பிறகு கிளைகள் முதல் அனைத்து நிலைகளுக்கும் மறுதேர்தல் நடைபெறும் என்றும் சுப்ரா குறிப்பிட்டார்.

இந்த மத்திய செயலவைக் கூட்டத்திற்கு தலைமை ஏற்குமாறு கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் இறுதிவரை அவர் கூட்டத்திற்கு வராததால் சுப்ரா தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.