Home உலகம் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த டிம் குக்!

ஸ்டீவ் ஜாப்ஸிற்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த டிம் குக்!

777
0
SHARE
Ad

Steave jobs and tim cook

கோலாலம்பூர், மார்ச் 16 – ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு பற்றிய புதிய புத்தகமான ‘பிக்கமிங் ஸ்டீவ் ஜாப்ஸ்: தி ரெவொலியூசன் ஆஃப் ரெக்லெஸ் அப்ஸ்டார்ட் இன்டூ ஏ விஸினரி லீடர்‘ (Becoming Steve Jobs: The Revolution of a Reckless Upstart Into A Visionary Leader), எதிர்வரும் 24-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

மூத்த பத்திரிக்கையாளர்களான ப்ரெண்ட் ஸ்லேன்டர் மற்றும் ரிக் டெட்ஷெலி எழுதியுள்ள இந்த புத்தகம் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல உருக்கமான சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

அமேசான் தளத்தில் அந்த புத்தகத்திற்கான முன் பதிவு படுவேகமாக நடைபெற்று வரும் நிலையில், வசிப்போரின் சுவாரசியத்தை அதிகரிக்கஅந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில சம்பவங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதில் கல்லீரல் நோயால் மரணப்படுக்கையில் இருந்த  ஸ்டீவ் ஜாப்ஸிற்கு, தற்போதய ஆப்பிள் தலைவர் டிம் குக் தனது கல்லீரலின் ஒரு பாதியை தானமாக கொடுக்க முன் வந்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

இது தொடர்பாக கல்ட் ஆப் மேக்‘ (Cult of Mac) எனும் பத்திரிக்கையில் வெளியாகி உள்ள செய்தித் துணுக்குகளில், “ஸ்டீவ் ஜாப்ஸின் உடல் நலன், டிம் குக்கை கவலையில் ஆழ்த்தியது. அவர் தனது கல்லீரலின் ஒரு பாதியை ஜாப்ஸிற்கு தானமாக கொடுக்க முன்வந்தார்”.

“அதற்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டார். பரிசோதனை முடிவுகள் சாதகமாக வந்த நிலையில், ஜாப்ஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மறுத்துவிட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக சுயசரிதைப் புத்தகத்தில்  டிம் கூக் வாயிலாக ஆசிரியர் பதிவு செய்ததும் வெளியாகி உள்ளது.

அதில், “கடந்த 13 வருடங்களில் ஜாப்ஸ் என்னை நான்கைந்து தருணங்களில் கடிந்து கொண்டார். அதில் நான் எனது கல்லீரலின் ஒரு பாதியை கொடுக்க முற்பட்ட தருணமும் ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய சம்பவங்கள் மட்டுமல்லாமல், டிஸ்னீ நிறுவனர் பாப் ஐகெருடன் சேர்ந்த கூகுள் நிறுவனத்திற்கு போட்டியளிக்க ஸ்டீவ் ஜாப்ஸ், யாகூ நிறுவனத்தை வாங்க முடிவு செய்த தருணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி ஒரு  சுயசரிதை கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்து இருந்தாலும், மேம்போக்கான வாழ்க்கையை வாழ்ந்த ஒருவர், திடீரென தொலைநோக்குடைய தலைவராக உருமாறிய தருணங்களின் விரிவான பக்கங்கள் தற்போதய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருக்கப்போகும் இந்த புத்தகம் பற்றிய எதிர்பார்ப்புகளும் ஆப்பிள் பிரியர்கள் மத்தியில் ஐபோனிற்கு நிகரான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.