டமாஸ்க், மார்ச் 27 – நைஜீரியாவில் தனி நாடு கோரி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டமாஸ்க் நகருக்குள் நேற்று முன்தினம் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 50 பேர் பலியாகியுள்ளனர். பின்னர் இளம்பெண்கள், குழந்தைகள் உள்பட 506 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். நைஜர் மற்றும் சாத் ராணுவத்தினர் கடந்த மாதம் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டவர்களை தான், மீண்டும் தீவிரவாதிகள் கடத்திச்சென்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவம் ஈடுபட்டுள்ளது. போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திய 506 பேரில் 50 மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர் என நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.