Home நாடு “சபாநாயகர் இன்னும் கடிதம் பெறவில்லை – எப்படி பெர்மாத்தாங் பாவ் தொகுதி காலியாகும்?” – அன்வார்...

“சபாநாயகர் இன்னும் கடிதம் பெறவில்லை – எப்படி பெர்மாத்தாங் பாவ் தொகுதி காலியாகும்?” – அன்வார் வழக்கறிஞர் கேள்வி

466
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர், ஏப்ரல் 1 – அன்வாருக்கு அரச மன்னிப்பு கோரி அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழப்பார் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அன்வாரின் வழக்கறிஞர் லத்தீபா கோயா கூறுகையில், “இந்த விவகாரத்தில் அகோங் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. அரச மன்னிப்பு விசாரணைக்குழு மட்டுமே தனது முடிவை அறிவித்துள்ளது. அகோங் முடிவு அதில் சேராது. காரணம் அகோங் சுயமாக தனது முடிவை எடுக்கக் கூடிய அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

மேலும், அன்வார் நாடாளுமன்றத்தில் பங்கேற்க அனுமதி கோரும் மனுவில் உள்துறை அமைச்சர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளின் பதிலும் கோரப்பட்டுள்ளது. அந்த மனு எதிர்வரும் ஏப்ரல் 9-ம் தேதியோடு தான் முடிவுக்கு வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில்,நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிகர் அமின் மூலியா இன்னும் அது போன்ற கடிதங்களை முறையாக பெறாத நிலையில், எப்படி பெர்மாத்தாங் பாவ் இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது? என்று லத்தீபா கேள்வி எழுப்பியுள்ளதாகவும் மலேசியாகினி தெரிவித்துள்ளது.