Home நாடு ‘தி மலேசியன் இன்சைடர்’ நிர்வாகி, ‘தி எட்ஜ்’ பதிப்பாளர் பிணையில் விடுதலை!

‘தி மலேசியன் இன்சைடர்’ நிர்வாகி, ‘தி எட்ஜ்’ பதிப்பாளர் பிணையில் விடுதலை!

542
0
SHARE
Ad

The-Edge-Malaysiaகோலாலம்பூர், ஏப்ரல் 1 – ‘தி மலேசியன் இன்சைடர்’ தலைமை நிர்வாகி ஜஹாபர் சாதிக் மற்றும் ‘தி எட்ஜ்’ பதிப்பாளர் ஹோ கை தட் ஆகிய இருவரும் இன்று மதியம் 12.30 மணியளவில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் காவல்துறை அதிகாரிகள் அவர்களை விடுவித்தனர்.

நேற்று இரவு 8.20 மணியளவில், நிர்வாக ஆசிரியர் லியோனெல் மோரியாஸ், மலாய் மொழி செய்திப் பிரிவின் தலைமை ஆசிரியர் சுல்கிப்ளி சுலோங் மற்றும் மலாய் மொழி செய்தி ஆசிரியர் அமின் இஸ்கண்டார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் ஹூடுட் பற்றிய கட்டுரை வெளியிட்டது தொடர்பில், கடந்த இரண்டு நாட்களில், மலேசியன் இன்சைடர் செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உட்பட 5 நிர்வாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.