Home உலகம் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்க ஜப்பான் முடிவு!

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்க ஜப்பான் முடிவு!

605
0
SHARE
Ad

same sex marriageடோக்கியோ, ஏப்ரல் 1 – ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள ஷிபுயா உள்ளூர் சபையில் இன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இந்த அங்கீகாரத்தின் காரணமாக இனி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமண சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால் சமூகத்தில் அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் வாழ முடியும்.enhanced-buzz-25136-1398701904-18வரி சலுகைகள், சமூக பாதுகாப்பு மற்றும் சொத்துரிமை என்று சராசரி மனிதனுக்கு கிடைக்கக் கூடிய அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கும். சிவில் சட்டப்படி, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்காத ஒரு நாட்டில், இது மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கை என்று உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என்று பலர் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம் இதற்கான விமர்சனங்களும் அங்கு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.