Home இந்தியா ஐபிஎல்-8: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

ஐபிஎல்-8: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

514
0
SHARE
Ad

1401080407-074மும்பை, மே 2 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்  அணியை 8 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை  இந்தியன்ஸ்.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  கேப்டன் வாட்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து  களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை  இழந்து 185 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 186 ரன்கள்  எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20  ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.  எனவே மும்பை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.