கோலாலம்பூர், மே 2 – நேற்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் ஜிஎஸ்டி-க்கு (பொருட்கள் மற்றும் சேவை வரி) எதிரான ‘கித்தா லவான்’ என்ற மிகப் பெரிய பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா,கேஎல்சிசி என இப்பேரணி நகரின் முக்கிய இடங்களுக்கு நகர்ந்து பின்னர் மாலை 5.30 மணியளவில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில், வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் உட்பட சுமார் 30 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(பல வகையான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்கள்)
(ஜிஎஸ்டி அமலாக்கத்திலிருந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பின்வாங்கக் கூறும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்கள்)
(கேஎல்சிசி அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள்)
(ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யும் காவல்துறை)
(இப்பேரணியில் பிரதமருக்கு எதிரான கேலிச்சித்திரங்களும் இடம்பெற்றன)
(கோலாலம்பூரில் பிரபல வணிக வளாகமான சோகோ-வில் பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.)
படங்கள்: EPA