Home உலகம் வெளிநாட்டு மீட்புக் குழுவினரை வெளியேறும் படி கேட்டுக்கொண்ட நேபாளம்!

வெளிநாட்டு மீட்புக் குழுவினரை வெளியேறும் படி கேட்டுக்கொண்ட நேபாளம்!

446
0
SHARE
Ad

indian rescueகாட்மாண்டு, மே 5 – நேபாள அரசு, தங்கள் நாட்டில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு மீட்புக் குழுவினரை , நாடு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

பெரும்பாலான மீட்புப்பணிகள் முடிவடைந்ததால், எஞ்சிய பணிகளை தங்கள் இராணுவமே பார்த்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் நேபாள அரசின் இந்த அறிவிப்பு இந்தியாவை குறிவைத்து அறிவிக்கப்பட்டதாக சில ஊடகங்கள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளன.

நேபாளத்தில் கடந்த 25-ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தியா உட்பட உலக நாடுகள் அங்கு பல்வேறு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 10 நாட்களில் பெரும்பாலான மீட்புப் பணிகள் முடிவடைந்ததால், இந்தியா உள்ளிட்ட 34 நாடுகளைச் சேர்ந்த 4,500  மீட்பு குழுவினரை நாடு திரும்பும் படி நேபாளம் கேட்டுக் கொண்டது.

#TamilSchoolmychoice

இது குறித்து நேபாள உள்துறை அமைச்சரும், இயற்கை பேரழிவு நிவாரண குழுவின் தலைவருமான பாம் தேவ் கவுதம் கூறுகையில், “பெரும்பாலான மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. வெளிநாட்டு  மீட்பு குழுவின் உதவி போதும் என்பதால், இந்தியா உட்பட அனைத்து வெளிநாட்டு மீட்பு  குழுவினரும் நாடு திரும்பும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்கள் பற்றி டுவிட்டரில் சர்ச்சை எழுந்த மறுநாள், நேபாளம் இவ்வாறு கேட்டுக் கொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. எனினும், அதற்கு நேபாள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்தியாவிற்கான நேபாள தூதர் தீப் குமார் உபாத்யே கூறுகையில், “நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்திலேயே மீட்பு  குழுவினரையும், மீட்பு உபரணங்களையும் இந்திய அரசு அனுப்பி வைத்தது மிகப்பெரிய உதவியாகும். அதன் மூலம் நிறைய மக்களை உயிருடன் மீட்க  முடிந்தது. அதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.”

“பெரும்பால மீட்புப் பணிகள் முடிந்ததால் தான் நாங்கள் அவர்களை நாடு திரும்பும் படி கேட்டுக் கொண்டோம்.மற்றபடி, இந்தியாவைக் குறிவைத்து நாங்கள் கூறவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.