Home நாடு ரொம்பின் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளர் முன்னிலை!

ரொம்பின் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளர் முன்னிலை!

530
0
SHARE
Ad

ரொம்பின், மே 5 – ரொம்பின் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் பாஸ் வேட்பாளரை முன்னிலை வகிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு சுமார் 8 மணி அளவில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹாசன் அரிஃபின்
சுமார் 10,015 வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதாகவும், பாஸ்
வேட்பாளர் நஸ்ரி அகமட் 6,580 வாக்குகள் பெற்று பின்தங்கி இருப்பதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rompin by election

#TamilSchoolmychoice

இதுவரை மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இம்முறை இடைத்தேர்தலில் 73 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலில் 85.9 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் பதிவு பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 53,294 ஆகும்.

கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இத்தொகுதி உறுப்பினராக இருந்த டான்ஸ்ரீ ஜமாலுடின்
ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதையடுத்து இத்தொகுதி காலியானது.

2013 பொதுத் தேர்தலில் பாஸ் மகளிரணித் தலைவி நூரிடா முகமட் சாலேவை சுமார்
15,114 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு இத்தொகுதியை மீண்டும்
தக்க வைத்துக்கொண்டார் ஜமாலுடின்.