வாஷிங்டன், மே 20 – ஆறு ஆண்டுகளாக டிவிட்டரில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, சில நாட்களுக்கு முன்பு @POTUS என்ற பெயரில் கணக்குத் துவங்கினார்.
ஒபாமா கடந்த மே 18-ம் தேதி டிவிட்டரில் கணக்குத் துவங்கிய 5 மணிநேரத்தில் 1 மில்லியன் ரசிகர்கள் அவரைப் பின் தொடர்ந்ததால் தற்போது அது கின்னஸ் சாதனை ஆகியுள்ளது.
தற்போதைய நிலவரப்பட்டு 2.14 மில்லியன் ரசிகர்களை அவரைப் பின்தொடர்கிறார்கள்.
இதற்கு முன்பு, அயர்ன் மேன் படத்தில் நடித்த ராபர்ட் டவ்னி ஜூனியர் தான் கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் ட்விட்டரில் கணக்குத் துவங்கிய 23 மணிநேரம் 22 நிமிடங்களில், சுமார் 1 மில்லியன் ரசிகர்களைப் பெற்றார்.
தற்போது அந்த சாதனையை ஒபாமா முறியடித்துள்ளார்.
அது சரி.. ஒபாமாவின் மனைவியான மிச்சல் ஒபாமா டிவிட்டர் கணக்கின் பெயர் என்ன தெரியுமா? @FLOTUS.
தனது கணவர் @POTUS என்ற பெயரில் கணக்குத் துவங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்த மிச்சேல் ஒபாமா, “Hey,@POTUS ! This is how you #GimmeFive, FLOTUS-style…” என்று பதிவிட்டுள்ளார்.