அத்தியாவசிய அமினோ அமிலமான ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதில்தான் இருக்கிறது. அதனால்தான் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்கிறார்கள். தாவர உணவுகளில் அதற்கு இணையான அதிகப் புரதம் கொண்ட ஒரே பொருள் சோயா.
100 கிராம் சோயாவில் 40 சதவிகிதம் புரதம் உள்ளது. மேலும் இதில் கால்சியம், பி 12, நல்ல கொழுப்புச்சத்து அனைத்தும் சோயாவில் அதிகம் உள்ளது.
உண்மையில் சோயா என்பது ஒரு வகையான பயறு. ஏதேனும் ஒரு வடிவத்தில் சோயாவை வாரத்தில் 2 முறை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சோயாவை நேரடியாக உபயோகிக்க விரும்பாதவர்கள், 1 கிலோ கோதுமை மாவுக்கு 100 கிராம் சோயா வீதம் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம். எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு.
உடலிலுள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும். இதயத்துக்கும் நல்லது. வாரத்தில் 5 நாட்கள் சோயா பால் எடுத்துக் கொண்டால் கொழுப்பு, இதயம் ஆகிய பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
சோயா பயறை ஊற வைத்து, சுண்டலாகச் செய்து சாப்பிட்டால், வைட்டமின் இ சத்தின் தேவை பூர்த்தியாகும். சோயாவில் மட்டும்தான் 20.9 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது.
இந்த இரண்டும் இதய நோய் பாதித்தவர்கள், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அவசியம் தேவை. இரும்புச் சத்து மற்ற பருப்புகளைவிட, சோயாவில் சற்று அதிகம் உள்ளது.