பேரிச்சம் பழங்களை கண்ணாடி பாட்டிலில் போட்டு, அவற்றில் சுத்தமான தேனை ஊற்ற, மூன்று நாட்கள் கழித்து, தினமும் காலை, மாலை என மூன்று பழங்கள் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கி விடும்.
இந்த பழத்தை தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும், பேரீச்சம் பழத்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
பேரீச்சம் பழத்தைப் பாலில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் அப்பழத்தைச் சாப்பிட்டுப் பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.
இரவில் பேரீச்சம் பழத்தில் மூன்றை நீரில் ஊறப் வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்தக் பழங்களை சாப்பிட்டு வந்தால் நுரையீரை சுத்தப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக்கும் பேரீச்சம் பழம்.