Home நாடு 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

463
0
SHARE
Ad

Crime-Pixஈப்போ, ஜூன் 3 – ஒரு கார் மற்றும் வீட்டை சோதனையிட்ட பிறகு 29 வயதான ஆடவரை கைது செய்த ஈப்போ காவல்துறையினர், 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற சோதனை நடவடிக்கையின்போது தாமான் புசிங் மர்மி புசிங் பகுதியில் வைத்து அக்குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டதாக, பேரா போதைப் பொருள் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு தலைமை உதவி ஆணையர் யாப் டூன் குவான் தெரிவித்தார்.

“அவரது காரில் இருந்து 914 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. மேலும் அருகிலுள்ள வீட்டில் இருந்து 115 கிராம் போதைப் பொருளை பறிமுதல் செய்தோம். அதன் மதிப்பு 51,450 ரிங்கிட் ஆகும். மேலும் 50 ஆயிரம் மதிப்புள்ள கார் மற்றும் 12 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கச்சங்கிலி ஆகியவையும் சோதனை நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டன,” என்று ஏசிபி யாப் டூன் கூறினார்.

#TamilSchoolmychoice

குற்றப் பின்னணி உடைய அந்த ஆடவர் தனது காருடன் காத்திருந்த போது போலீசாரிடம் சிக்கியதாகக் குறிப்பிட்ட அவர், யாரிடமேனும் போதைப் பொருளை ஒப்படைக்க அவர் காத்திருந்திருக்கலாம் என்றார்.

“அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் மெங்லெம்பூ, பத்து காஜா, புசிங் பகுதிகளில் விநியோகிக்கப்பட இருந்தது. கைதான ஆடவர் வியாழக்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்கப்படுவார்,” என்றார் யாப் டூன்.

பயங்கர போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அந்த ஆடவர் விசாரிக்கப்பட உள்ளார். இத்தகைய குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மரண தண்டனை விதிக்கப்பட சட்டத்தில் இடமுள்ளது.