Home இந்தியா தனது சுயசரிதைப் படத்துக்காக ரூ.80 கோடி கேட்ட தோனி!

தனது சுயசரிதைப் படத்துக்காக ரூ.80 கோடி கேட்ட தோனி!

636
0
SHARE
Ad

Ms-Dhoni-Sushant-Singhபுதுடெல்லி, ஜூன் 3 – இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டு வரும் படம், ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி’. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார்.

இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்குகிறார். இந்தப் படத்துக்கான காப்புரிமைக்காக 80 கோடி ரூபாயை தோனி கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni5தோனியின் கதையை முன்வைத்து படம் உருவாக்கப்படுவதால் படக்குழு தோனிக்கு ரூ.20 கோடி தந்துள்ளதாகவும், ஆனால் தோனி தனக்கான காப்புரிமை (ராயல்டி) தொகையாக ரூ.80 கோடி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

தோனி தொடர்புடைய கிரிக்கெட் காணொளிகளை பெறுவதற்காக படக்குழுவிடம் ரூ.15 கோடி கேட்டுள்ளது பிசிசிஐ கிரிக்கெட் வாரியம். மேலும், இது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என படக்குழுவினர் தெரிவித்தனர்.