Home இந்தியா இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மேகிக்கு ஆஸ்திரேலியா தடை!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மேகிக்கு ஆஸ்திரேலியா தடை!

520
0
SHARE
Ad

maggi-nestleமெல்போர்ன், ஜூன் 16 – இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸிற்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசின் வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை, நெஸ்லே நிறுவனத்திற்குக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வர்த்தக ரீதியான அறிவிப்பினை அனுப்பி உள்ளது. இந்த அறிவிப்பில், “மக்களின் உணவுப் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மேகி நூடுல்ஸிற்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசு இதுவரை மாதிரிகளை எடுத்துச் சோதனை செய்யவில்லை. விரைவில் மேகி மாதிரிகளைப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் என்றும் அந்நாட்டின் வேளாண் மற்று உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அத்தகைய பரிசோதனைகளில் மேகி நூடுல்ஸ் மக்கள் உண்பதற்கு ஏற்றதாக இருந்தால், இந்த தற்காலிகத் தடை நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியாவில் தெரிவிக்கப்பட்டது போல்,அலுமினியம் மற்றும் காரியம் வேதிப் பொருட்கள் அதிகமாக இருந்தால் தடை நிரந்தரமாகவும் வாய்ப்புள்ளது.

#TamilSchoolmychoice

நெஸ்லே இந்தியா நிறுவனம், இந்தியாவில் இருந்து அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், நேபால், ஆஸ்திரேலியா, பிரிட்டன், கென்யா ஆகிய நாடுகளுக்கு மேகி நூடுல்ஸை ஏற்றுமதி செய்கிறது. இதில் சிங்கப்பூர், நேபால் நாடுகள் ஏற்கனவே மேகிக்குத் தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாதிரிகளைப் பரிசோதனைகளுக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.