அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 50 சதவீதம் பேரால் பார்க்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இதுவரை உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த ‘அவதார்’ மற்றும் ‘ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 7’ ஆகிய படங்களின் சாதனையை மிஞ்சி முதலிடத்தைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வசூல் சாதனை பற்றி அப்படத்தின் இயக்குனர் கோலின் டிரெவரோவ் கூறுகையில், “இந்தச் சாதனை நிகழ்வதற்கு முக்கியக் காரணம் சினிமா ரசிகர்கள் தான். அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ஹாலிவுட் திரைப்படங்களின் மரபான அடுத்த பாகம் குறித்து டிரெவரோவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர், “ஜூராசிக் வோர்ல்ட் திரைப்படத்தின் தொடர்ச்சியைத் தயாரிக்கும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.