Home கலை உலகம் என் சுயசரிதையைப் படமாக்க தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்- நடிகை சோனா!

என் சுயசரிதையைப் படமாக்க தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்- நடிகை சோனா!

631
0
SHARE
Ad

actress-sona-hot-in-saree-pics-14சென்னை, ஜூன் 17- மதுவிருந்து, கேளிக்கை என்று பொழுது போக்கு விடுதிகளுக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்துபவர் கவர்ச்சி நடிகை சோனா.

அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைச் சுயசரிதையாக எழுதியுள்ளார். எப்படிப்பட்ட சம்பவங்களை எழுதியுள்ளார் என்று தெரியவில்லை.

இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு அவர் கூறியது யாதெனில்:

#TamilSchoolmychoice

“என் சுய சரிதையை எழுதி முடித்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. அதை வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறேன்.

அதில் பல பரபரப்பான சம்பவங்கள் இடம் பெற்றிருப்பதால் அதைத் திரைப்படமாகத் தயாரிக்க இரண்டு மலையாளத் தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். ஆனால், என் சுய சரிதையை மலையாளத்தில் தயாரிக்க நான் விரும்பவில்லை.

நான் வசிப்பது தமிழ் நாட்டில். தமிழ்ப் படத்தில் தான் அறிமுகம் ஆனேன். தமிழ் ரசிகர்கள் தான் என்னை வாழ வைக்கிறார்கள். அதனால் என் சுயசரிதையைத் தமிழில் தான் தயாரிப்பேன்” என்றார்.

ஆகா, சோனாவின் தமிழ்ப்பற்று தான் என்னே!

அதுசரி, மலையாளப் படத் தயாரிப்பாளர்கள் எந்த மாதிரி சுயசரிதைப் படம் எடுக்கக் கேட்டார்களோ? சோனாவுக்கே வெளிச்சம்!