Home வணிகம்/தொழில் நுட்பம் மாஸ் துணை நிறுவனத்திற்கு முகமட் நஸ்ருதீன் தலைமை நிர்வாகியாக நியமனம்!

மாஸ் துணை நிறுவனத்திற்கு முகமட் நஸ்ருதீன் தலைமை நிர்வாகியாக நியமனம்!

557
0
SHARE
Ad

Mohd-Nadziruddin-Mohd-Basriகோலாலம்பூர், ஜூன் 23 – மாஸ் தனது துணை நிறுவனமான ‘மாப் கிரவுண்ட் ஹேண்ட்லிங் சர்வீஸ் செண்ட்ரியான் பெர்ஹாட்டிற்கு’ப்(MAB Ground Handling Services Sdn Bhd) புதிய தலைமை நிர்வாகியாக முகமட் நஸ்ருதீன் முகமட்  பஸ்ரியை நியமனம் செய்துள்ளது. இவர் எதிர்வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தனது பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகமட் நஸ்ருதீனின் நியமனம் தொடர்பாக மாஸ் தலைமை நிர்வாகி கிறிஸ்டோப் முல்லர் கூறியதாவது:-

“இந்தப் புதிய பொறுப்பில் முகமட் நஸ்ருதீன் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறோம். இவர் எங்கள் நிறுவனத்தின் தரைச் சேவை பிரிவில் பயணிகளின் நன்மதிப்பை பெறுவார். இந்தப் பணிகளை அவர் மாப் கிரவுண்ட் ஹேண்ட்லிங் சர்வீஸ் செண்ட்ரியான் பெர்ஹாட்டிற்கு மட்டுமல்லாது புதிய ஏர்லைன் பயணிகளுக்கும், பிற ஏர்லைன்ஸ்களுக்கும் தொடருவார் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2013-ம் ஆண்டு மாஸில் இணைந்த நஸ்ருதீன், 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தலைமை மறுசீரமைப்பு அதிகாரி (CRO)-யாக பணியாற்றி வந்தார். மாஸில் இணைவதற்கு முன்பாகச் சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஏர்லைன்ஸ் செயல்பாடுகளிலும், விமான நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் நிதி பிரிவுகளிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். மாஸ் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அதிரடியாக இறங்கி உள்ள கிறிஸ்டோப் முல்லரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் மிக முக்கியமானவர் முகமட் நஸ்ருதீன் என்பது குறிப்பிடத்தக்கது.