Home உலகம் புத்தகமாக வருகிறது விக்கிபீடியா!

புத்தகமாக வருகிறது விக்கிபீடியா!

616
0
SHARE
Ad

Tamil_Wikipedia_stamp_2013_-_sample4நியூயார்க், ஜூன் 25- இணையத்தில் உலக மக்களின் தகவல் களஞ்சியமாக விளங்குவது விக்கிபீடியா.

விக்கிபீடியாவின் ஆங்கில வடிவத்தைப் புத்தகமாகக் கொண்டு வரும் இமாலய முய்ற்சியில் ஈடுபட்டிருக்கிறார், நியூயார்க்கைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியரான மைக்கேல் மாண்டிபெர்க்.

இவர் விக்கிபீடியாவின் மென்பொருளை உருவாக்கியுள்ளார்.விக்கிபீடியாவின் தகவல்களை 7600 தொகுதிகள் கொண்ட புத்தகமாகத் தயார் நிலையில் வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

தேவைக்கேற்ப  online-ல் அச்சிட்டு வழங்குவார். இதை அச்சில் பதிவேற்றம் செய்வதற்கு 14 நாட்கள் ஆகுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த விக்கிபீடியா புத்தகத்தின் விலை அதிகமில்லை; வெறும் 5 லட்சம் டாலர் தான்! இந்திய நாணய மதிப்பில் 3 கோடியே 20 லட்சம்!

என்ன மயக்கம் வருகிறதா?

ஒவ்வொரு தொகுதியையும்  தனித்தனியாகவும் பெறலாம்.ஒரு தொகுதியின் விலை 80 டாலர்.அதாவது, 5100 ரூபாய்.