Home கலை உலகம் விக்ரம் நடிக்கும் ‘மர்ம மனிதன்’படத்திற்குத் தாணுவால் சிக்கல்!

விக்ரம் நடிக்கும் ‘மர்ம மனிதன்’படத்திற்குத் தாணுவால் சிக்கல்!

563
0
SHARE
Ad

Chiyaanசென்னை,ஜூலை 1- நடிகர் விக்ரம் நடிக்கும் ‘மர்ம மனிதன்’ படப்பிடிப்பு துவங்கவிருந்த சமயத்தில், தயாரிப்பாளர் தாணு, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து, அப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.

விகரம் பிரபு- பிரியா ஆனந்த் நடித்து,புது இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கிய ‘அரிமா நம்பி’ படத்தைத் தாணு  தயாரித்திருந்தார்.

படம் வெற்றி பெற்றதால், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் தயாரிக்க, தாணு ஒப்பந்தம் போட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இச்சமயத்தில் ஆனந்த் சங்கர் மர்ம மனிதன் கதையை விக்ரமிடம் சொல்லிச் சம்மதம் வாங்கியிருந்தார்.

இதற்கு முன் தாணு தயாரித்து விக்ரம் நடித்திருந்த ‘கந்தசாமி’ படத்தில் ஏற்பட்ட பிரச்சினையை மனதில் வைத்துத்  தாணுவைத் தவிர்க்க நினைத்த விக்ரம், மர்ம மனிதன் படத்தைத் தயாரிக்க ஐங்கரன் நிறுவனத்தை இயக்குநருக்குப் பரிந்துரை செய்தார்.

ஆனந்த் சங்கரும் இதற்குச் சம்மதித்தார்.ஆனால், இந்தத் தகவலைத் தாணுவிடம் எப்படித் தெரிவிப்பது என்ற தயக்கத்தில் தெரிவிக்காமலே விட்டுவிட்டார்.

படப்பிடிப்புக்குத் தயாரான நிலையில் இத்தகவல் தெரிந்து தாணு கோபம் கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துச் சிக்கலை உண்டாக்கியுள்ளார்.

இப்போது சமரசப் பேச்சுவார்த்தை நடக்கிறது.