Home நாடு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் பேஸ்புக்கில் இணைந்தார் டாக்டர் வீ!

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் பேஸ்புக்கில் இணைந்தார் டாக்டர் வீ!

753
0
SHARE
Ad

wee0107கோலாலம்பூர், ஜூலை 2 – கடந்த ஜூன் 26-ம் தேதி நடைபெற்ற அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருந்த அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் மீண்டும் பேஸ்புக் போன்ற நட்பு ஊடகப் பக்கங்களில் தமது பதிவுகளை இடத் தொடங்கினார்.

தனது மனைவி டத்தின் ஜெசிக்கா லிம்முடன் இணைந்து எடுத்துக் கொண்ட நிழற்படத்தை அவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரதமர்த் துறை அமைச்சரான டாக்டர் வீ, உடல் இளைத்திருப்பது அப்படத்தில் நன்றாகத் தெரிகிறது. எனினும் யாருடைய உதவியும் இன்றி அவர் நிமிர்ந்து உட்கார்ந்தபடி காட்சி தருகிறார்.

#TamilSchoolmychoice

“அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நன்கு உடல்நலம் தேறி வருகிறேன். விரைவில் அனைவரையும் சந்திப்பேன்,” என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் டாக்டர் வீ.
இதே புகைப்படம் மற்றும் பதிவு அவரது டுவிட்டர் பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று டாக்டர் வீயின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அவருக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமது பணிகளைத் தொடங்கும் வரை தனிமையில் ஓய்வெடுக்க விரும்புவதாக டாக்டர் வீ தெரிவித்துள்ளார்.