லண்டன், ஜூலை 2 – இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மலேசியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இது குறித்து வெளியாகி உள்ள அறிவிப்பில், “பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அழைப்பை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கேமரூன், மலேசியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளார். அவரது பயணம் சில மணி நேரங்களே இருந்தாலும்.இங்கிலாந்து-மலேசிய உறவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 30-ம் தேதி, கேமரூனின் பயணம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னுடன் 3 முக்கிய வர்த்தக அமைச்சர்களையும், 30 தொழிலதிபர்களையும் மலேசியாவிற்கு அழைத்து வருவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இங்கிலாந்து-மலேசிய வர்த்தகம் சிறக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.
அதே சமயத்தில், நஜிப்-கேமரூன் இடையே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத எதிர்ப்பு குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.