இன்று பிகேஆர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த தகவல்களை வெளியிட்டார். 19 வகையான நகைகளை ஹாங்காங்கிலிருந்து வாங்குவதற்கு அவர் இந்த பணத்தை வழங்கியதாகவும், ஒரு நில வர்த்தக பேரத்திற்கென கொடுக்கப்பட்ட லஞ்சத்தின் ஒரு பகுதி இதுவென ரஃபிசி கூறினார்.
இதற்குரிய ரசீதுகளையும் ர ஃபிசி பத்திரிக்கையாளர்களிடம் காட்டினார். இதனால் ரோஸ்மா மற்றும் தீபக் இருவருமே முன்வந்து உண்மைகளை விளக்க வேண்டுமென ரஃபிசி கேட்டுக் கொண்டார்.
3 மாத காலத்தில் 13 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டுள்ளதால் இதனை ஊழல் தடுப்பு ஆணையம் கடுமையானதாக கருதி விசாரிக்க வேண்டுமென பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடனிருந்த பிகேஆர் கட்சியின் பொருளாளர் வில்லியம் லியோங் தெரிவித்தார்.
இது குறித்து டத்தின் ரோஸ்மா அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது அவருடைய உதவியாளர் இது குறித்து தான் மேல்விவரங்கள் பெற வேண்டியுள்ளது என்று கூறினார்.
-மலேசியாகினி