Home இந்தியா கருணாநிதிக்குப் பின் ஸ்டாலினா? – அழகிரி ஆதரவாளர்கள் போர்க்கொடி!

கருணாநிதிக்குப் பின் ஸ்டாலினா? – அழகிரி ஆதரவாளர்கள் போர்க்கொடி!

1109
0
SHARE
Ad

மதுரை,ஜன.04 – தனக்குப் பிறகு தி.மு.க வை வழி நடத்திச் செல்ல மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று மு.கருணாநிதி பேசியதற்கு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் மு.கருணாநிதி, பேசுகையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மேன்மைக்காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள் இருக்கும்வரை பாடுபடுவேன். அப்படியானால் அதன்பிறகு என்ற கேள்விக்கு பதில்தான் இங்கே அமர்ந்திருக்கின்ற தம்பி ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்று பேசினார்.

கருணாநிதியின் இந்த கருத்து தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வை வழிநடத்தி செல்லும் வாய்ப்பு மு.க.ஸ்டாலினுக்குத்தான் என்பதை தலைவர் கருணாநிதி சூசகமாக அறிவித்து விட்டார் என்று மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் தி.மு.க தென் மண்டல அமைப்பு செயலாளரும், மத்திய மந்திரியுமான மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கருணாநிதியின் இந்த கருத்துக்கு கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் மு.க.அழகிரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தொண்டர்களை அரவணைத்து செல்வதிலும், தலைமைப் பண்பிலும் சிறந்து விளங்குகிறார். எனவே தொண்டர்களும் மு.க.அழகிரியை விரும்புகிறார்கள். அடுத்த தலைவர் யார்? என்பதை தொண்டர்கள் தீர்மானிக்க வேண்டும். அதுதான் கட்சிக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.