ஜார்ஜ் டவுன், ஜூலை 2 – இனி, பினாங்கு மாநிலத்தைப் ‘பக்காத்தான் அரசாங்கம்’ என்று அழைக்க வேண்டாம். பினாங்கு மாநில் அரசாங்கம் என்று தான் அழைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் இன்று அறிவித்துள்ளார்.
இந்த முடிவை மாநில சட்டமன்றத்தைத் சேர்ந்த 30 உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் லிம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 2013 பொதுத்தேர்தலை முன் வைத்து, கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பினாங்கு மாநிலக் கொள்கைகள் அனைத்தும் தொடரும் என்றும் நேற்று நடைபெற்ற மாநிலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பினாங்கு மாநில அரசாங்கத்தின் 30 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் எந்த மாற்றமும் இன்றி, அம்னோவைச் சேர்ந்த 10 எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களோடு அரசாங்கம் செயல்படும் என்று லிம் குறிப்பிட்டுள்ளார்.