சென்னை, ஜூலை 2- குறுகிய காலத்தில் சினிமாவில் முன்னேறியவர்கள் ஒரு சிலர் மட்டுமே.அதற்குச் சிறந்த உதாரணமாகச் சிவகார்த்திகேயனைச் சொல்லலாம். அவருக்கு அடுத்து பாபிசிம்ஹாவைச் சொல்லலாம்!
‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்கிற பழமொழி இவ்விருவர் விசயத்திலும் கண்கூடான உண்மை.
கதாநாயகனின் நண்பர்களில் ஒருவராக நடிக்கத் தொடங்கிப் பின்பு கதாநாயகனாகவே உயர்ந்து வெற்றி பெற்றவர் சிவகார்த்திகேயன். அவரைப் போலவே பாபிசிம்ஹாவும் கதாநாயகனின் நண்பர்களில் ஒருவராக நடிக்கத் தொடங்கி, இன்று பிரபலக் கதாநாயகனாகத் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஜிகர்தண்டாவில் நகைச்சுவை வில்லனாக நடித்து அசத்தியதால் தேசிய விருது கிடைத்தது. அந்தப் படத்திற்குப் பின், இவர் காட்டில் ஒரே அடைமழை தான்!
வரிசையாகக் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்து காத்துக் கிடக்கின்றன. தற்போது, மசாலாப்படம், உறுமீன், பாம்புச் சட்டை, இறைவி, கவலை வேண்டாம், கோ2 உட்பட ஏழு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி, அதிகமானோருக்குத் தேவைப்படும் கதாநாயகன்(most wanted hero) பாபிசிம்ஹா தான்!
ஆனாலும், நிலை உயரும் போது பணிவு கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் பந்தா ஏதுமின்றி அமைதியாகவே இருக்கிறார் சிம்ஹா.