Home இந்தியா சென்னையில் 95 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியத் தொடங்கினர்!

சென்னையில் 95 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியத் தொடங்கினர்!

683
0
SHARE
Ad

helmetசென்னை, ஜூலை2- ஜூலை 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்திருப்பவர், 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டுமென்று  சென்னை உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் உத்தரவிட்டன.

தலைக்கவசம் அணியாதவர்களின் வாகனம் மற்றும் ஆவணங்களைத் தயவு தாட்சண்யமின்றிப் பறிமுதல் செய்யக் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி நேற்று காவல்துறையினர் இவ்விசயத்தில் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டனர்; தீவிரமான சோதனை வேட்டையில் ஈடுபட்டனர்.

#TamilSchoolmychoice

காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை சோதனையில் ஈடுபட்டதில் ஒரு சிலரே தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினர். 95 சதவீதம் பேர் தலைக்கவசம் அணிந்து வந்தனர்.

இத்திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே தலைக்கவசம் அணிந்தனர். தற்போது நீதிமன்ற உத்தரவுக்குப் பின் 75 சதவீதம் பேர் கூடுதலாகத் தலைக்கவசம் அணிந்து வந்துள்ளனர்.

இது நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவிற்குப் பொதுமக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பையே காட்டுகிறது எனக் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நேற்று மாலை வரை சென்னை மாநகர் முழுவதும் நடத்திய சோதனையில், தலைக்கவசம் அணியாத 1008 பேர் மீது வழக்குப் போடப்பட்டது; 452 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 556 பேரின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

42