Home இந்தியா குழந்தையை மது குடிக்க வைத்து இரசித்த இளைஞர்கள்!

குழந்தையை மது குடிக்க வைத்து இரசித்த இளைஞர்கள்!

592
0
SHARE
Ad

1412444842-3956சென்னை, ஜூலை 6- ஒரு குழந்தைக்கு ஐந்து இளைஞர்கள் கூடி மதுவைக் கொடுத்துக் குடிக்கச் செய்து, சிரித்து மகிழும் காட்சி அனைத்துச் செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மேலும், நட்பு ஊடங்களிலும் இக்காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்காணொளிக் காட்சியில் ‘TN25 AJ 8209’ என்ற வாகன எண் பதிவாகியுள்ளது. இது திருவண்ணாமலைப் பதிவு எண்ணைக் குறிப்பதாகும்.

#TamilSchoolmychoice

இந்த வண்டி திருவண்ணாமலை ஏழுமலை என்பவருக்குச் சொந்தமானது எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.

சமூக ஆர்வலர்கள் இதை மனிதத் தன்மையற்ற செயல் எனக் கண்டித்துள்ளனர்.

மனித உரிமை ஆர்வலர்களின் இந்த இளைஞர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்துள்ளனர்.

இக்குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர்களுக்குக் குறைந்தது 3 வருட சிறைத்தண்டனை வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.