Home தொழில் நுட்பம் தம்படம் (செல்ஃபி) மூலம் பணப்பரிவர்த்தனை – மாஸ்டர் கார்ட் புதிய முயற்சி!

தம்படம் (செல்ஃபி) மூலம் பணப்பரிவர்த்தனை – மாஸ்டர் கார்ட் புதிய முயற்சி!

607
0
SHARE
Ad

mastercard-selfieவாஷிங்டன், ஜூலை 6 – இணையத்தின் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படும் ரகசிய எண், கைரேகைப் பதிவு போன்றவற்றைத் தவிர்த்து விட்டுத் தம்படங்களைப் (selfie) பயன்படுத்த ‘மாஸ்டர் கார்ட்’ (Master Card) நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை அந்நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

பணப்பரிமாற்றம் என்பது நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகிறது. வங்கிகளில் மூலம் நேரடியாக நடைபெற்று வந்த பணப் பரிவர்த்தனைகள் அதன் பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியால் கணினிகளுக்கும், திறன்பேசிகளுக்கு இடமாற்றலானது. தற்போது திறன்பேசிகளில் ஒற்றைப் பொத்தான்கள் மூலம் நடைபெற்று வரும் பணப் பரிவர்த்தனைகள் எந்த அளவிற்குப் பயன்படுத்த சுலபமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு மோசடிகள் நடைபெறுவதற்கும் சுலபமாகி விடுகிறது. இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை நிதி நிறுவனங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் எடுத்து வருகின்றன.

அதில் ஒன்று தான் தம்படத்தைப் பயன்படுத்தும் முயற்சி. இணையம் மூலம் பணப்பரிவர்த்தகளைச் செய்யும் போது தங்கள் தகவல்களை உறுதி செய்வதற்குப் பயனர்கள் தங்களைத் தம்படம் எடுத்துக் குறிப்பிட்ட ஒரு செயலியில் பதிவு செய்ய வேண்டும். எடுக்கப்பட்ட தம்படம் உணமையானது எனில் பணப்பரிவர்த்தனை அடுத்த கட்டத்திற்குச் செல்லும்.

#TamilSchoolmychoice

இது குறித்து மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் அஜய் பல்லா கூறுகையில், “என்னைப் பொருத்தவரை அடுத்த தலைமுறை, தம்படப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனைப் பணப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்துவது சாத்தியம் தான் என்றே தோன்றுகிறது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரகசிய எண் சில நேரங்களில் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, முறைகேடுகளைத் தவிர்க்க வாடிக்கையாளர்களின் தம்படத்தை, ரகசிய எண்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.”

“இதற்காக நாங்கள் பிரத்யேகமாக உருவாக்கி இருக்கும் செயலியைப் பயன்படுத்த வேண்டும். அனைத்துத் திறன்பேசிகளிலும் மேம்படுத்திக் கொள்ளும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியை, நாங்கள் முயற்சித்துப் பார்க்க இருக்கின்றோம். பயனர்கள் பதிவு செய்யும் தம்படம், 0 மற்றும் 1 என்ற ‘பைனரி’ (Binary) எண்களாக மாற்றப்படும். ஏற்கனவே அவர்கள் பதிவு செய்திருக்கும் தம்படத்துடன் இந்தப் பைனரி எண்கள் ஒப்பிடப்படும். இதன் மூலம் தேவையற்ற முறைகேடுகளைத் தவிர்க்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.